42. நரசிங்க முனையரைய நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 42
இறைவன்: பக்தஜனேஸ்வரர்
இறைவி : மனோன்மணி
தலமரம் : நாவல்
தீர்த்தம் : கோமுகி
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : திருநாவலூர்
முக்தி தலம் : திருநாவலூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி - திருவாதிரை
வரலாறு : திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட மன்னர். சிவனடியார்களுக்கு அமுதளித்து பொன்னும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் போலி சிவபக்தன் ஒருவன் வந்தான். ஏனையோர் அவனை இகழ்ந்தனர். ஆனால் நாயனார் அவனுக்கும் பொன் கொடுத்து உணவளித்து அனுப்பினார்.
முகவரி : அருள்மிகு. பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் – 607204 விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04149-224391, அலைபேசி : 9443382945
திரு.வி.சம்பந்த குருக்கள் - தொலைபேசி : 04149-224391

இருப்பிட வரைபடம்


ஆறணிந்த சடைமுடியார்க் காதிரைநாள் தொறும்என்றும் 
வேறுநிறை வழிபாடு விளங்கியபூ சனைமேவி
நீறணியும் தொண்டர்அணைந் தார்க்கெல்லாம் நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமல்அளித் தின்னமுதும் நுகர்விப்பார்.
- பெ.பு. 3991
பாடல் கேளுங்கள்
 ஆறணிந்த


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க